உலகம்

அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ; 70 இலட்சம் மக்கள் பங்கேற்பு

அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்ப் ட்ரம்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுமார் 70 இலட்சம் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியைப் போல எங்களை ஆள நினைக்கிறார். ஆனால் இது அமெரிக்கா, இங்கு அதிகாரம் மக்களுக்கே உரியது; மன்னர்களுக்கோ அல்லது அவர்களின் கோடீஸ்வர நண்பர்களுக்கோ அல்ல” எனப் போராட்ட அமைப்பாளர்கள் கோசமிட்டுள்ளனர்.

தேசிய நினைவிடங்கள் மற்றும் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்துள்ளன.

டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், மன்ஹாட்டன் பகுதியின் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் குடிவரவு அதிகாரிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளான ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி அங்குப் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அங்குப் பாடல்களைப் பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மட்டுமன்றி, லண்டன், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற உலக நாடுகளின் தலைநகரங்களிலும் புலம்பெயர் அமெரிக்கர்கள் திரண்டு ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர்.

அங்குப் ஜனாதிபதி ட்ரம்ப்பை “போர்க்குற்றவாளி” மற்றும் “பாசிசவாதி” எனப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தண்டிக்க முற்படுவதாகவும், இராணுவத்தை உள்நாட்டு நகரங்களில் நிலைநிறுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *