உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; பிரதான சூத்திரதாரியை தெரிவிப்பாரா கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உதய கம்மன்பில வெளிப்படுத்துவாராக இருந்தால் அது விசாரணைக்கு இலகுவாக இருக்கும் என்றும், அதன்படி அவரிடம் வாக்குமூலத்தை பெற்று பிரதான சூத்திரதாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்க முடியமாக இருக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எதிர்வரும் 31ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவேன் என்ற முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
27ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்படுமாக இருந்தால் 31ஆம் திகதி அவரால் அந்தப் புத்தகத்தை வெளியிட முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அந்தப் புத்தகத்தின் ஊடாக வெளிப்படுத்துவதாகவே கூறியிருந்தார். நாட்டு மக்களும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் பிதான சூத்திரதாரியை தேடிக்கொண்டிருக்கையில் கம்மன்பிலவினால் அவர் வெளிப்படுத்தப்படுவராக இருந்தால் அது தொடர்பான விசாரணைகளுக்கும் இலகுவாக இருக்கும். கம்மன்பிலவிடம் வாக்குமூலத்தை பெற்று பிரதான சூத்திரதாரியை தேடிப்போகலாம் என்றார்.
![]()