முச்சந்தி

யாழ்ப்பாணம் பண்ணையில் நடந்த வாள்வெட்டில் இளைஞன் படுகாயம்; கடலுக்குள் விழுந்தவர் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் பண்ணையில் நேற்று மாலை நடத்தப்பட்ட வாள்வெட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை விரட்டி சென்ற இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இனந்தெரியாத குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடல்பகுதியில் விழுந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்சென்ற நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *