இலங்கை

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன்  தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு

வடக்கில்  கடந்த ஒரு வாரகாலமாகத் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ஸுக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

நேற்றுக் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *