இலங்கை
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்குமான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், யாழ் பொஸ்ட் விடுதியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சம கால அரசியல் நிலைப்பாடுகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் சமகால அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் சமத்துவக் கட்சி தலைவர் சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
![]()