பலதும் பத்தும்

பயண அனுமதிக்காக காத்திருக்கும் கப்பல்கள்; ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் காட்சி!

ஹோர்முஸ் ஜலசந்தியில் பயண அனுமதிக்காகக் காத்திருக்கும் கப்பல்களின் படங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பயண அனுமதிக்காக பல கப்பல்கள் காத்திருப்பதை ஒரு பயணிகள் விமானத்திலிருந்து காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியும் டஜன் கணக்கான கப்பல்களும் எண்ணெய்க் கப்பல்களும் சிக்கித் தவிப்பதை அவதானிக்க முடிகின்றது.

எண்ணெய்க் கப்பல்கள், திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட ஏராளமான கப்பல்கள், ஹோர்மூஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் நங்கூரமிட்டு தேங்கி நிற்கின்றன.

அவற்றில் பலவற்றால் முன்னோக்கி நகரவோ அல்லது வளைகுடாவை விட்டு வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா போர் ஒரு மாதத்தை எட்டிய நிலையில் பல பாதிப்புக்களை பல நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்கள் ஈரானிடம் அனுமதி கோர வேண்டும் என்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்கு சுங்க வரி செலுத்தினாலே கப்பல்களை செல்ல அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *