உலகம்

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, வென்னப்புவவின் தல்தேன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மிலானோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்குள் ஷெஹான் பெர்னாண்டோவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது பணித் துப்பாக்கியும் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெஹான் தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது இது ஒரு கொலையா என்பது குறித்து இத்தாலிய காவல்துறை விசாரித்து வருகிறது.

ஷெஹான் பெர்னாண்டோ, இத்தாலிய காவல்துறை மற்றும் அந்நாட்டு மக்களிடையே மதிக்கப்பட்ட ஓர் அதிகாரியாக விளங்கினார்.
இத்தாலிய காவல்துறைத் துறையில் பிரதிநிதித்துவம் செய்த ஒரே இலங்கையர் அவரே என்பதால், அவரது மரணம் இத்தாலிய அதிகாரிகளையும் அந்நாட்டில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது பெற்றோரும் இத்தாலியில் வசித்து வருகின்றனர், அவர்களும் தங்கள் மகனின் இழப்பால் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷெஹான் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு இத்தாலியின் மிலான் நகரில் நாளை (27ஆம் திகதி ) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *