உலகம்

கட்டுப்பாட்டை மீறி போரின் விளிம்பிற்கு வந்துள்ளது ; ஐ.நா எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே “கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது” என்றும், உலகம் தற்போது ஒரு “பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது” என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே “மிகப்பொருத்தமான காலம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அவர் ஈரானிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“இப்போது செய்ய வேண்டியது போர் மோதல்களைத் தீவிரப்படுத்துவதல்ல, மாறாக இராஜதந்திர தீர்வுகளை நோக்கி நகர்வதாகும்.

சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளித்து, அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுச்செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *