உலகம்

அடிபணிவதை விட பதிலடி கொடுப்பதே சிறந்தது; டிரம்பை எள்ளி நகையாடும் ஈரானிய ஊடகங்கள் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இரம்பின் இந்த அறிவிப்பை , ஈரானிய ஊடகங்கள் அமெரிக்காவின் பலவீனமாகவும் தயக்கமாகவும் சித்தரித்து வருகின்றன.

அமெரிக்காவின் இந்த முடிவை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதும் ஈரான், அடிபணிவதை விட பதிலடி கொடுப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

ஈரானின் பிரஸ் டிவி அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுக பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரானின் ராணுவ அச்சுறுத்தல் மற்றும் மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே ட்ரம்ப் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவோ அல்லது எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தவோ அமெரிக்காவின் இத்தகைய உளவியல் போர்கள் உதவாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ட்ரம்ப்பின் இந்த ஐந்து நாள் அவகாசத்தை ஒரு தற்காலிக பின்வாங்கலாகவே ஈரான் பார்க்கிறது. மேலும் சர்வதேச ராஜதந்திர ரீதியாக இந்த ஐந்து நாட்கள் என்பது பேச்சுவார்த்தைக்கு போதுமானதாக இல்லை என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்தும் நீடிக்கிறது

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *