உலகம்

மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்; அமெரிக்கா, இஸ்ரேலியப் படைகளால் அதிரும் ஈரான்

ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் தனது எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக மீளப்பெற்ற சில மணிநேரங்களிலேயே, அந்நாட்டின் இரு முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் மாகாணத்திலுள்ள காவே வீதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தை நிர்வகிக்கும் பிரதான கட்டடம் மற்றும் எரிவாயு விநியோகச் சீர்மையை உறுதிப்படுத்தும் நிலையம் ஆகிய இரு முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களால் குறித்த நிலையங்கள் “பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக” ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொரம்ஷாஹர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயுவை விநியோகிக்கும் பிரதான குழாய்த்தொடர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *