உலகம்

ட்ரம்பின் போர்நிறுத்த அறிவிப்பை மீறி தொடரும் தாக்குதல்

ஐந்து நாள்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியபோதும், மத்திய கிழக்கில் பரவலாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கிழக்கில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, இஸ்ரேல், ஈரான் மற்றும் அரபு நாடுகளில் தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரானுடன் பேச்சு இடம்பெறுவதாகவும், அதன் முன்னேற்றம் கருதியே ஐந்து நாள்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அமெரிக்காவுடன் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், கடந்த சில மணிநேரங்களில் பல்வேறு நாடுகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

ஜெருசலேமில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *