பலதும் பத்தும்

TVKவுக்கு சவால் விடும் நடிகர் பவர் ஸ்டாரின் புதிய கட்சி!

அரசியலில் எனக்குப் போட்டி நடிகர் விஜய் தான்; அவரது TVKவுக்கும் எனது AVKவுக்கும் தான் உண்மையான போட்டி” என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சவால் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

தமிழகம் உட்பட கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் 23ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைக்க திமுக கூட்டணியும், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற அதிமுக கூட்டணியும் தீவிரமாக மல்லுக்கட்டி வருகின்றன.

இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்பதால் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ‘அண்ணா வளர்ச்சி கழகம்’ (AVK) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக இன்று (23) அதிரடியாக அறிவித்துள்ளார்.

“அரசியலில் எனக்குப் போட்டி நடிகர் விஜய் தான்; அவரது TVKவுக்கும் எனது AVKவுக்கும் தான் உண்மையான போட்டி” என்று பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்து, நகைச்சுவை வேடங்களில் பிரபலமான சீனிவாசன், சில மோசடி வழக்குகளில் சிக்கி சிறை சென்றவர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *