பலதும் பத்தும்

இந்திய மக்கள் ஒரு ஆண்டுக்கு எத்தனை முட்டை எடுத்துக் கொள்கின்றனர்?

புரதச்சத்தின் ஆதாரமாக இருக்கும் முட்டையினை இந்தியாவில் உள்ள நபர்கள் ஆண்டுக்கு சராசரியாக எத்தனை முட்டைகள் சாப்பிடுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முட்டை புரதச்சத்தின் ஆதாரமாக இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதில் புரதம் மட்டுமின்றி இன்னும் அதிகமான சத்துக்களும் அடங்கியிருக்கின்றது. முட்டையில் காலாவதியாகும் தேதி பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிராத நிலையில், தற்போது உத்தரபிரதேச மாநிலம் புதிய விதி ஒன்றினை அமல்படுத்த உள்ளது.

முட்டையில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படும் என்றும் இதனால் நீண்ட நாட்கள் விற்பனை ஆகாதா முட்டைகளை நுகர்வோர் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது.

முட்டை சாப்பிடுவதில் இந்தியாவினை விட மெக்சிகோ நாடு தான் உலகின் முதல் இடத்தில் வகிக்கின்றது. இங்குள்ள மக்கள் வருடத்திற்கு சராசரியாக 363 முட்டைகள் எடுத்துக் கொள்கிறார்களாம்.

ஆனால் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 106 முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.

முட்டை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான், இலங்கையை விட முன்னணியில் காணப்படுகின்றது.

இந்தியாவில் மக்கள் தற்போது முட்டை சாப்பிடுவதில் சற்று ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்திய மாநிலங்களை எடுத்துக் கொண்டால், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மக்கள் அதிகளவில் முட்டை சாப்பிடுகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *