உலகம்

ஈரானுடன் இராஜதந்திர ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் நகர்வு குறித்து நெதன்யாகுவின் அறிவிப்பு

ஈரான் உடனான தற்போதைய போரை ஒரு இராஜதந்திர உடன்படிக்கையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருதுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியதைத் தொடர்ந்து, நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இஸ்ரேலியப் படைகளும் (IDF) அமெரிக்க இராணுவமும் தற்போதைய மோதலில் ஈட்டியுள்ள மகத்தான சாதனைகளை ஒரு பலமான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நலன்களைப் பாதுகாக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை எட்ட முடியும் என ட்ரம்ப் நம்புவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ரீதியிலான அழுத்தங்கள் மூலம் ஈரானை ஒரு நிரந்தர உடன்படிக்கைக்குக் கொண்டு வருவதே இந்தப் போரின் இறுதி இலக்காக அமையக்கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் அல்லது ஈரான் தரப்பின் எதிர்வினை குறித்து எவ்வித மேலதிக விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

ட்ரம்ப்பின் இந்தத் திடீர் மனமாற்றம் மற்றும் ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *