பலதும் பத்தும்

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டு ஆரம்பிக்கும் போதும் தீர்கதரிசிகளின் கணிப்புகள் குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்படுவது வழக்கம்.

அந்தவகையில் 2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் மீது ஆர்வம் வலுத்துள்ளது.
தீர்க்கத்தரிசி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பாபா வங்கா தான். இவரின் கணிப்புகளில் இதுவரையில் கிட்டதட்ட 85 சதவீதம் மேல் பழித்துள்ளதுள்ளதால் இவரின் கணிப்புகள் உலகளவில் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பாபா வங்கா என்றதுமே இவர் தீர்க்னத்தரிசி என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் பலருக்கும் இவர் ஆணா, பெண்ணா என்பது குறித்த சந்தேகம் இருக்கும். பல்கேரிய நாட்டை சேர்ந்த ஒரு பெண் தான் பாபா வங்கா.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. சிலர் மின்னல் தாக்கி தான் பாபா வங்கா கண் பார்வையை இழந்ததாகவும் குறிப்பிடுகின்றார்கள்.

கண் பார்வையை இழந்த பின்னர் தான் பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.

பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11,இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை தொடர்பிலும் பாபா வங்கா முன்னரே கணித்திருந்தார். அவை நடந்தேறிய பின்னரே பாபா வங்காவின் கணிப்புகளை பெருமளவானோர் நம்ப ஆரம்பித்தனர்.

இவரின் கணிப்புகளில் பிரபஞ்சத்தில் அழிவு வரும் வரையில் என்னென்ன நிகழப்போகின்றது என்பது பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பொதுவாகவே நாம் இறக்கும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும் என்று சொல்லுவார்கள். ஆச்சரியமூட்டும் விடயம் என்னவென்றால் பாபா வங்காவுக்கு அவரின் இறப்பு திகதி பற்றியும் முன்பே தெரியும் என்பது தான்.

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா? | Who Is Baba Vanga Did She Predict Her Own Death

பாபா வங்கா தன் மரணத்தை முன்கூட்டியே, அதாவது ஆகஸ்ட் 11, 1996 அன்று தனது 85வது வயதில் இறப்பார் என்பதையும் பல வருடங்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்துள்ளார்.

மார்பகப் புற்றுநோயால் (Breast cancer) பாதிக்கப்பட்ட பாபா வங்கா அவர் கணித்த திகதியில் காலமானார். அவர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *