பலதும் பத்தும்

நூடுல்ஸ் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்! 8 ஆண்டாக தொண்டையில் இருந்த சாப்ஸ் ஸ்டிக்

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிடும் போது மெட்டல் சாப்ஸ் ஸ்டிக்கை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா போன்ற நாடுகளில் நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு சாப்ஸ் ஸ்டிக் எனப்படும் ஒருவகையான குச்சியை பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு சாப்ஸ் டிக்கை தான் பயன்படுத்துகின்றனர்.

இதனை நாமும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம். நூடுல்ஸ் சாப்பிடும் இந்த குச்சியை நபர் ஒருவர் விழுங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் கூட கவனமாக சாப்பிடுவார்களே! என்று நமக்கு நிச்சயம் கேள்வி எழும். குறித்த நபர் மது அருந்திக்கொண்டே நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அவர் நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு 12 செ.மீ நீளமுள்ள மெட்டல் சாப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தியுள்ளார்.
திடீரென குச்சியை விழுங்கிய நிலையில், அவை தொண்டையில் சிக்கியுள்ளது. அதனை கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் பயந்து போன குறித்த நபர் 8 ஆண்டுகளாக அப்படியே தொண்டியில் சாப்ஸ் ஸ்டிக்கை வைத்து வாழ்ந்துள்ளார். ஆனால் சமீப காலமாக அதிகமான வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு சென்றவர் அங்கு மருத்துவம் மூலம் அறுவை சிகிச்சை செய்து குறித்த சாப்ஸ் ஸ்டிக்கை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *