பலதும் பத்தும்

வாட்ஸ்அப் பயனர்களுக்கு காத்திருக்கும் அதிரடி அப்டேட்!

வட்ஸ்அப் (WhatsApp) செயலியின் ‘Disappearing Messages’ (மறைந்துபோகும் செய்திகள்) வசதியில் புதிய மாற்றமொன்றை அறிமுகம் செய்ய மெட்டா (Meta) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அனுப்பப்படும் செய்திகளைப் பெற்றவர் வாசித்தவுடன், 15 நிமிடங்களில் அவை தானாகவே அழியும் (Auto Delete) புதிய அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 24 மணிநேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் போன்ற கால அளவுகளுடன், மிகக் குறுகிய நேரத்திலேயே தகவல்களை அழிக்க விரும்பும் பயனர்களுக்காக இந்த 15 நிமிட கால அளவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *