இலங்கை

விஜய்யின் அரசியலை நான் பொருட்படுத்தவில்லை ; நாமல் அதிரடி

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்லேவ் 2026’ (India Today Conclave 2026) சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாமல் ராஜபக்ஷ இந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

தெற்காசியாவின் வளர்ந்து வரும் அரசியல்வாதி என்ற ரீதியில், இந்த மாநாட்டின் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களில் தமக்கு பிடித்தவர்கள் யார் என வினவப்பட்ட போது, சச்சின் டெண்டுல்கர், சஞ்சு சம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தமக்குப் பிடிக்கும் என நாமல் பதிலளித்தார்.

அதேபோல், நடிகர் விஜய் குறித்த கேள்விக்குப் பதிலளித்த நாமல், “விஜய் எனக்கு பிடித்தமான ஒரு நடிகர், ஆனால் அவரது அரசியல் எனக்கு முக்கியமல்ல” எனத் தெரிவித்தார். நடிகர் விஜய் கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது எனக் கூறியுள்ளாரே என அறிவிப்பாளர் கேட்டபோது, “கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது.

1970-களில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கச்சத்தீவு குறித்து ஒரு பேச்சுவார்த்தை தேவைப்பட்டால், அது தமிழ்நாடு அரசுடன் அல்ல, இந்திய மத்திய அரசுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.” என நாமல் பதிலளித்தார்.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் குறித்து கேட்கப்பட்ட போது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்தை நாமல் சுட்டிக்காட்டினார். “அரகலய போராட்டத்திற்கு USAID நிறுவனம் நிதி வழங்கியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது நான் சொல்லும் கருத்தல்ல, அவரே கூறியுள்ளார்” என அவர் புன்னகையுடன் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், நாமலின் பதில்கள் மிகவும் நேரடியாகவும் தீர்க்கமாகவும் இருந்ததாக அறிவிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். அதற்கு நாமல் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *