இலங்கை

சகோதரத்துவ ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.!; ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நிறைவு செய்த பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் மிகவும் முக்கியமான ஒன்று

ரமழான் நோன்பு மனிதர்களுக்கு எளிமை, தியாகம் மற்றும் மற்றவர்களின் துயரை உணரும் பண்பை கற்றுத்தருகிறது.

மேலும், பசி மற்றும் அதன் வலியை உணர்ந்து, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை உருவாக்குவது ரமழானின் முக்கிய நோக்கமாகும்.

இந்த காலம் மனிதநேயம், சமத்துவம், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் காலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம் தற்போது பல சவால்களை சந்தித்து வரும் நிலையில், ரமழான் நோன்பின் ஆசீர்வாதத்தால் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவும் உலகம் உருவாக வேண்டும் என அவர் பிரார்த்தித்தார்.

அதேபோல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தனது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *