ஒரே இரவில் உலகின் 9 பணக்கார நாடுகள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!; மத்திய கிழக்கை அதிரவைத்த ‘ஒபரேஷன் மேட்மேன்’

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், இன்று அதிகாலை ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்துள்ளது. “சொன்னதை செய்வோம்” எனக் கூறி அடித்த ஈரான், ஒரே இரவில் 7 பெரும் பணக்கார நாடுகள் உட்பட மொத்தம் 9 நாடுகள் மீது ஏவுகணை மழையைப் பொழிந்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான ‘சவுத் பார்ஸ்’ (South Pars) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தபோது, “நாங்கள் எதற்கும் தயார்” என்று ஈரான் கூறியது வெறும் வார்த்தையல்ல, அது ஒரு பெரும் திட்டம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.
இலக்கான ‘பணக்கார’ நாடுகள்: தனிநபர் வருமானத்தில் (GDP per capita) உலகிலேயே முன்னணியில் இருக்கும் வளைகுடா நாடுகள் இன்று ஈரானின் இலக்காக மாறியுள்ளன.
இஸ்ரேல்: ராமேத் கான் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் பலியாகினர். மேற்குக் கரைப் பகுதியிலும் கடும் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கட்டார்: சுமார் $110K தனிநபர் வருமானம் கொண்ட இந்நாட்டின் ‘ராஸ் லப்பான்’ எரிவாயு மையம் (Ras Laffan LNG hub) பலத்த சேதமடைந்துள்ளது.
ஐ.அ.இ.(UAE): டுபாய் மற்றும் அபுதாபி இலக்கு வைக்கப்பட்ட நிலையில், 27 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அந்த நாடு இடைமறித்துள்ளது. இருப்பினும், எரிசக்தி நிலையங்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது.
சவுதி அரேபியா: ஜூபைல் மற்றும் சாம்ரெஃப் சுத்திகரிப்பு நிலையங்கள் அருகே ஏவுகணைகள் விழுந்ததால், அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
குவைத் & பஹ்ரைன்: அமெரிக்கத் தளங்கள் மற்றும் 5-வது கடற்படைத் தலைமையகம் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஓமன்: இதுவரை நடுநிலை வகித்து வந்த ஓமனும் இந்த முறை தப்பவில்லை. அங்குள்ள தொழில்பேட்டைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தான் & ஈராக்: இங்குள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒபரேஷன் மேட்மேன் (Operation Madman): சொந்த நாட்டுப் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையிலும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்தச் செல்வத்தையும் சிதைக்கும் நோக்கில் ஈரான் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. வளைகுடா நாடுகளின் மொத்த ஜிடிபி (GDP) மதிப்பைச் சிதைப்பதன் மூலம், உலக நாடுகளைப் போரை நிறுத்தக் கோரி கெஞ்ச வைப்பதே ஈரானின் இந்த ‘ஒபரேஷன் மேட்மேன்’ வியூகம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் நிலைத்தன்மையை வேரோடு அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் பூகம்பமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை ஈரான் – இஸ்ரேல் இடையிலான நிழல் யுத்தமாக (Shadow War) இருந்த நிலை மாறி, இப்போது வளைகுடா நாடுகள் அனைத்தும் நேரடியாகப் போர்க்களத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் சவுதி அரேபியா, ஐ.அ.இ. மற்றும் கட்டார் போன்ற நாடுகளின் எரிசக்தி மையங்கள் குறிவைக்கப்பட்டிருப்பது, சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையை விண்ணை முட்டச் செய்யும்.
இது ஒருபுறமிருக்க, இதுவரை அமைதிப் பூங்காவாகவும், முதலீட்டாளர்களின் சொர்க்கமாகவும் கருதப்பட்ட டுபாய், அபுதாபி போன்ற நகரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, இது பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சியைப் பெரும் பின்னடைவுக்கு உள்ளாக்கும்.
மேலும், ஈரானின் இந்த “ஒபரேஷன் மேட்மேன்” உத்தி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தினால் அது உலகப்போராக வெடிக்கக்கூடும், அமைதியாக இருந்தால் வளைகுடா நாடுகளின் செல்வம் சாம்பலாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால், பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட மத்திய கிழக்கின் பொருளாதாரக் கோபுரம், இப்போது ஈரானின் ஏவுகணை மழையால் சரிவின் விளிம்பில் நிற்கிறது.
இந்தத் தாக்குதல் உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதும், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதும் இப்போது மில்லியன் டொலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
![]()