பலதும் பத்தும்

விரைவாக உடல் எடையை குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க

ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் இரண்டும் விட்டமின் சி, நார்ச்சத்து, வளர்சிதை மாற்றம், ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்ப பெற்றவை. இவை உடல் எடை குறைப்பிற்கு வழிவகுப்பவை.

நெல்லிக்காய், வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படும். கொழுப்பை வேகமாக எரிக்க உதவிடும். செரிமானத்தையும் மேம்படுத்தும்.

ஒருவர் தொடர்ந்து நெல்லிக்காயை உட்கொண்டால் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் காரணமாக கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவது கலோரி எரிப்பை துரிதப்படுத்தும்.

நெல்லிக்காயுடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, பசியை கட்டுப்படுத்தி, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை குறைக்க உதவிடும்.

உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க துணைபுரியும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். ஆரஞ்சு பசியை கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், நெல்லிக்காய் கொழுப்பை எரிக்க வழிவகுக்கும்.

இரண்டு பழத்திற்கும் தனித்துவமான நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைப்பதற்கு இவை இரண்டுமே அவசியமானவை. இரண்டையும் தினமும் மிதமாக உட்கொள்வது நல்லது.

100 கிராம் ஆரஞ்சு பழத்தில் சுமார் 87 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. விட்டமின் சி 53 மில்லி கிராமும், செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து 2.4 கிராமும் உள்ளடங்கி இருக்கும். 47 கலோரிகளும் காணப்படும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் பசியை கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கி வரை காணப்படும். அதாவது ஒரு ஆரஞ்சு பழத்தை விட 10 மடங்கு அதிக வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும். இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்க செய்யும். உடலில் சேரும் கொழுப்பையும் ஒழுங்குபடுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *