பலதும் பத்தும்

ஆங்கில அறிவை மேம்படுத்தும் செயலி

ஆங்கில மொழித் தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கிலப் பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலப் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில் நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மொழிசார் தடைகளைத் தீர்ப்பதற்கு உதவும் வகையில் இது செயலாற்றும்.

2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவசப் பரீட்சார்த்த காலத்தை வழங்கும் இந்த செயலி ஆங்கிலப் பேச்சுத்திறன் குறைபாட்டினால் பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தொடர்பாடலை மேற்கொள்வதில் ஏற்படும் சவால்களினால், மக்கள் தமது தன்னம்பிக்கையை இழப்பது மாத்திரமன்றி, தொழில்சார் சூழல்களில் பேச முடியாமல் தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்கள் அவர்களின் தோல்வி மனப்பான்மையை அதிகரிப்பதுடன், பல சிறந்த வாய்ப்புகளையும் நழுவச் செய்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, அதனைச் சீர்செய்வதற்கு உதவும் வகையில் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கைச் சூழல்களில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான ஆற்றலை வழங்கும் பயனுள்ள மொழி அறிவுறுத்தல்களினூடாக, சவால்களுக்குத் தீர்வுகளை வழங்குகின்றது.

இந்த app, சிங்களம் மற்றும் தமிழ் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குப் பெரிதும் துணையாக அமைவதுடன், வினாக்கள் புரியாத சந்தர்ப்பங்களில் தமது தாய்மொழியைப் பயன்படுத்தும் வசதியையும் வழங்குகின்றது.

விறுவிறுப்பான தொகுப்பாளர் காணொளிகள், Animation-கள், Interactive கதாபாத்திரங்கள் மற்றும் பயிற்சிகள் ஊடாக இக்கற்றல் அனுபவம் மெருகூட்டப்படுகின்றது. புள்ளிகள் மற்றும் முன்னிலை வரிசைப்பட்டியல்கள் (Leaderboards) மூலம் பயனாளர்களை ஊக்கப்படுத்துகிறது.

எதிர்காலத்தில், AI இனால் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடத்தும் துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. SELVE app ஐ தற்போது App Store மற்றும் Google Play ஆகிய தளங்களிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *