உலகம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு ஆட்சியாளர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அவசர நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்தித்துள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தானை அச்சுறுத்தி வரும் இந்த நீண்டகால பொருளாதார நெருக்கடி, ஆப்கானிஸ்தானுடனான மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்துள்ளது.

பொருளாதார நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சம்பளம், எரிபொருள் பயன்பாடு மற்றும் அரசாங்க செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

அரச வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இரண்டு மாதங்களுக்கு 50% ஆக குறைத்தல், எரிபொருளைச் சேமிப்பதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரச வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தல், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு சம்பளம் நிறுத்தப்படல், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 25% மாக குறைத்தல், 300,000 ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும் தரம் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் அரசு அதிகாரிகளின் இரண்டு நாள் சம்பளம் பொது உதவிகளுக்காக கழித்தல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *