உலகம்

மத்திய கிழக்கு போர் – பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்வு

பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிகூடிய விலை அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மொத்த எரிவாயு விலை தெர்ம் ஒன்றுக்கு 171.34 பென்ஸாக அதிகரித்துள்ளது. 2023 ஜனவரிக்கு பின்னர் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து, இங்கிலாந்தில் ஒரு தெர்ம் எரிவாயுவின் மொத்த விலை 71.13 பென்ஸிலிருந்து சுமார் 140 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிரித்தானியா மத்திய கிழக்கு மற்றும் கத்தாரில் இருந்து வரும் எரிவாயுவை பெருமளவில் சார்ந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், ஏவுகணைத் தாக்குதல்களால் உலகின் மிகப்பெரிய எரிவாயு மையங்களில் ஒன்றான கத்தாரின் ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு வளாகம் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *