உலகம்

மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி

மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் தளங்களை இந்த மோதல் குறிவைக்கத் தொடங்கியிருப்பது, அபாயகரமான புதிய கட்டத்தைக் குறிக்கிறது என்று மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஈரான் பாதிக்கப்பட்டதைப் போலவே, பல வளைகுடா நாடுகளும் முதல் முறையாகத் தங்களின் உற்பத்தித் திறனில் பாதிப்பைச் சந்தித்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மேலும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும், பிராந்தியத்தை நிலைப்படுத்தவும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி” பேச்சுவார்த்தை நடத்த மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *