பலதும் பத்தும்

இந்த ஒரு காய் சாப்பிடுங்க – நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும்

தவறான உணவுப்பழக்கத்தால் வரும் இந்த கொலஸ்ரால் பிரச்சனையை தீர்ப்பதற்கு அன்றாட உணவில் இந்த ஒரு காய்கறியை மட்டும் சாப்பிட்டால் போதும்.

கொலஸ்ரால்

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், இளம் வயதிலேயே வயது வித்தியாசமின்றி கெட்ட கொழுப்பிற்கு ஆளாகின்றனர்.

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் நமது வாழ்க்கை முறையில் நாம் சீராக இருக்க வேண்டும். அதிலும் மிக முக்கியமாக உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

பீட்ரூட்டில் நல்ல அளவு நைட்ரிக் ஆக்சைடு உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

 

கூடுதலாக, பீட்ரூட்டில் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூலம், கணைய செல்களை செயல்படுத்துகின்றன.

 

இந்த பதிவில் கொலஸ்ரால் உள்ளவர்களுக்கு பீட்ரூட் எப்படி  உதவும் என்பதை பார்க்கலாம்.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

பீட்ரூட்

 

மேலும் கண்டறிக
புகைப்பட தொகுப்புகள்
உணவகங்கள் மற்றும் உணவு விநியோகம்
தமிழ் வானொலி நிலையங்கள்

 

ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்தல் : பீட்ரூட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும். ட்ரைகிளிசரைடு என்பது இரத்தத்தில் உள்ள ஒரு முக்கிய வகை கொழுப்பு ஆகும்.

இது உணவில் உள்ள அதிகப்படியான கலோரிகளைச் சேமித்து ஆற்றலை வழங்குகிறது. இதன் அளவு 150 mg/dL க்கும் குறைவாக இருப்பது ஆரோக்கியமானது.

150-199 mg/dL எல்லையளவாகவும், 200 mg/dL க்கும் அதிகமாக இருந்தால் அது உயர் ட்ரைகிளிசரைடு எனப்படும். இது தான் கெட்ட கொழுப்பு.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

 நார்ச்சத்து உட்கொள்ளல் : பீட்ரூட்டில் அதிகளவான நார்ச்சத்து உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட் சாப்பிட்டால் அதில் இருக்கும் 3.8 கிராம் நார்ச்சத்து நமது உடலின் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

 

 

இரத்த அழுத்தத்தம்: பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகின்றன. இது இரத்த நாளங்களை தளர்த்தி விரிவடையச் செய்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த ஒரு காய் சாப்பிடுங்க - நரம்பில் சிக்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் | Beetroot Controls Cholesterol Improve Heart Health

ஆக்ஸிஜனேற்றிகள் : பீட்ரூட்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது தான் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பு சேர்மானங்கள். இவை கொழுப்பு ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய உதவும்.

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: பீட்ரூட்டில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. எனவே கொழுப்பு அதிகமுள்ளவர்கள் இந்த பீட்டூட்டை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *