இலங்கை

சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறையில் போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி   ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் பொலிஸாருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.

குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற பொலிஸாரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, பொலிஸாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாக குற்றம் சாட்டினர்.

அத்துடன், மிலேச்சத்தனமான கொலைகளை பொலிஸார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன்போதே குறித்த 17 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button