உலகம்

பகிரங்க மன்னிப்பு கோரியது ஈரான்; அடுத்தடுத்து விழும் கடும் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்க படைகளும் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாக வளைகுடா நாடுகள் கூறியிருக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய ஷாய்பா எண்ணெய் வயலைக் குறி வைத்து ஈரான் ஏவிய நான்கு ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாக சௌவூதி அரேபியா தெரிவித்துள்ளது,

இதற்கிடையே, இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட் மற்றும் தெஹ்ரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது.

இதனால், ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 1230 ஆகவும், டெபனானில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆகவும் உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *