உலகம்

பாகிஸ்தான் – ஆப்கான் எல்லையில் இரவோடிரவாக கடும் மோதல் : அதிகரிக்கும் போர் பதற்றம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மூண்டுள்ள கடும் மோதலில், பாகிஸ்தான் தரப்பில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தமது படைகள் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் 15 ராணுவச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக தலிபான் பேச்சாளர் ஜபிஹல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்

எனினும், இந்தத் தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பல இடங்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

பதிலடித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *