இலங்கை

பிரபாகரனின் வீட்டை புனரமைக்க ஏற்பாடா?

” பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டுள்ளது.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்,

“புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையிலுள்ள வீட்டை புனரமைத்து அதனை அவரின் சகோதரியிடம் கையளிப்பதற்கு வல்வெட்டித்துறை பிரதேச சபையில் யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுளது.” என சுட்டிக்காட்டி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

“ இது பற்றி தகவல் இன்னும் பதிவாகவில்லை. தகவல்களை தேடுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது அது பற்றி பதிலளிக்க முடியாது.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *