இலங்கை

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை; அரச்சுனா எம்.பி.!

“இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்
அந்த முறைமையை இல்லாதொழித்துவிட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்.
எனவே, அத்தேர்தலை நடத்துவார்களா என்பது தெரியாது.
நடத்தப்பட்டால்கூட வடக்கில் நிச்சயம் தேசிய மக்கள் சக்தி
மண்கவ்வும்.

அதேவேளை, இலங்கை என்பது ஒரு நாடு. இதனை கூறுவதால் அந்த கருத்தை
மட்டும் அடிப்படையாக வைத்து எனக்கு எதிராக சேறு பூசலாம்.

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பது பயன் இல்லை. 40 வருடங்கள் எமது
காலத்தை நாசமாக்கிவிட்டோம்.

மக்களை இழந்துவிட்டோம். எனவே, அது பற்றி தற்போது கதைப்பதில் பயன்
இல்லை.

2002 இல் நான் மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே இருந்தேன். புலிகள்
அமைப்பில் இணைவதற்குகூட முயற்சித்தேன். ஆனால் தற்போது அந்த
நிலைப்பாடு மாறிவிட்டது.

எனினும், நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது. அதற்கு தீர்வு காணப்பட
வேண்டும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும். இனவாத
அரசியல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் அர்ச்சுனா
எம்.பி. குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *