உலகம்

அமரிக்காவில் மட்டுமல்லாது பிரித்தானியாவிலும் எப்ஸ்டீன் சர்ச்சை; ரோயல் மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட அண்ட்ரூ

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், ரோயல் லொட்ஜ் மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளார்.

அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் தற்போது நோர்போக் பகுதியில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் அண்ட்ரூவின் ‘இளவரசர்’ பட்டம் மற்றும் ஏனைய கௌரவங்கள் பறிக்கப்பட்ட போதே, அவர் ரோயல் லோட்ஜ் இல்லத்தை காலி செய்ய வேண்டும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருந்தது.

தற்போது அவர் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள ஒரு தற்காலிக இல்லத்தில் தங்கியுள்ளார். சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட் மன்னர் சார்லஸின் தனிப்பட்ட சொத்து என்பதால், அண்ட்ரூவின் புதிய இல்லத்திற்கான செலவுகளை மன்னரே பொறுப்பேற்றுள்ளார்.

பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அண்ட்ரூ , தொடர்பு குறித்த புதிய புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2010 ஆம் ஆண்டு எப்ஸ்டீனால் அனுப்பப்பட்ட பெண் ஒருவர், அண்ட்ரூவின் ரோயல் லொட்ஜ் இல்லத்தில் அவருடன் தங்கியிருந்ததாகப் புதிய புகார் எழுந்துள்ளது.

ஒரு அரச இல்லத்திற்குள் இவ்வாறான சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், அண்ட்ரூ ஒரு பெண்ணின் மீது மண்டியிட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைஅயை ஏற்படுத்தியது.

தற்போது எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் சாட்சியமளிக்குமாறு அண்ட்ரூவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *