நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பாலமுருகனுக்கு சாதனைத் தமிழன் விருது

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் போது 2025 ஆம் ஆண்டுக்கான ‘ சாதனைத் தமிழன் ‘ விருது நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழநல்லூர் பி.எஸ்.பாலமுருகனுக்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாநகர சபையின் முதல்வர் திருமதி.வி.மதிவதனி ஆகியோர் இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகனுக்கு வழங்கிக் கௌரவித்தனர்.
இதேவேளை, இலங்கையில் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்கும் ஆளுமைகளைத் தெரிவு செய்து ‘டான்’ தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டு தோறும் சாதனைத் தமிழன் விருதினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இம் முறை நாதஸ்வரச் சக்கரவர்த்தி பாலமுருகன் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதைச் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தனதாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]()