மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழு நியமனம்

2026 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனவரி 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றையதினம் ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ்நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர்
நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலி 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதிகுறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ்
நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பானமுன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு’ ஒன்றை
நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.
![]()