‘திட்வா’ சூறாவளி: கண்டியில் 300 மெட்ரிக் தொன்களுக்கு மேற்பட்ட பிரிக்கப்படாத கழிவுகள்

‘திட்வா’ சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளால் கண்டி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பிரிக்கப்படாத கலப்புக் கழிவுகள் தற்போது கண்டி நகர சபைக்குச் சொந்தமான கோஹாகொட தேக்கவத்த குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டுள்ளதாக கண்டி நகர சபை தெரிவிக்கின்றது.
குவிக்கப்பட்ட பொருட்கள் குப்பை என்று அழைக்கப்பட்டாலும், அவை குப்பை அல்ல, அரிசி, பருப்பு, மாவு, உருளைக்கிழங்கு, உப்பு, பால் மா, சோப்புகள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஆகும்.
பிரதான வணிக நிலையங்களில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பல்பொருள் மற்றும் பொது வெள்ளத்தில் மூழ்கியதால் உருவாகியுள’ள கழிவுப்பொருட்கள் இவ்வாறு குவிக்கப்படுவாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டி நகர சபைப் பகுதியிலும் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைப் பகுதியிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இவ்விடத்தில் அகற்றப்படுகின்றன. மேலும் சாதாரண நாட்களில் 70 முதல் 80 மெட்ரிக் டன்கள் வரை பெறப்பட்டாலும், இவ் அனர்த்த்திற்கு பின் தினமும் 30 மெட்ரிக் டன் பிரிக்கப்படாத கலப்புக் குப்பைகள் அதிகமாக கிடைக்கின்றன.
கண்டி நகரம், பேராதனை, கட்டுகஸ்தோட்டை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட கடுமையான பேரழிவு காரணமாக, வர்த்தக நிலையங்கள், வீடுகள் உள்ளிட்ட நகர பகுதிகளில் இருந்து தினமும் வலமைக்கு அதிகமாக 30 மெட்ரிக் டன் பிரிக்கப்படாத கலப்பு குப்பைகள் பெறப்படுவதாகவும், வழக்கமாக தினமும் 70 முதல் 80 மெட்ரிக் டன் வரை பெறப்பட்டாலும் தறபோது தினமும் சுமார் 100 மெட்ரிக டன்கள் வரைபெறப்படுவதாகவும் கண்டி மா நகர சபையின் ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்கதெரிவத்தார்.
நவம்பர் 28 ஆம் திகதி முதல் இது வரை சுமார் 16 நாட்கள் குப்பை சேகரித்து சுத்தம் செய்யும் இவ் விடத்திற்கு மின்சாரம் கிடைக்காததால், கழிவுகளை மறுசுழற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
![]()