பலதும் பத்தும்

பாரதியார் பிறந்த நாளையொட்டிய கவிதை நூல் வெளியீடு!

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, கோவையூர்க் (கோப்பாய்) கவிஞர் திருமகள் குளோரியா ரூபாவின்“பாரதியும் நானும்” என்ற வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் (15)திங்கள் அன்று மாலை 3.30 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி பிரதம விருந்தினராகவும் அமலமரித் தியாகிகள் சபையில் வடமாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வுள்ளனர்.

நூலின் வெளியீட்டுரையை அருட்தந்தை செ. அன்புராசாவும் நயப்புரையை விரிவுரையாளர் வேல் நந்தகுமாரும் ஆற்றுவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button