பலதும் பத்தும்

பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஷ் காலமானார்!

இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் “மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி” என்ற பாடல் மிகவும் பிரபல்யமடைந்த பாடலாகும்.

இவர் சிறிது காலம் சுகவீனமுற்று தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரை, கொழும்பு பிரதேச செயலகம் அண்மையில் நடத்திய சாஹித்திய விழாவில் கொழும்பு கலாச்சார சங்கம் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில் இவரது மறைவுக்கு இலங்கைத் தமிழ் கலைஞர் சங்கம், அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், அகில இலங்கை மக்கள் திலகம் கலை, கலாச்சார சமூக சேவை சங்கம், புதிய அலை கலை வட்டம், சுதந்திர தமிழ் கலைஞர் ஐக்கியம், சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் ஆகியன ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button