பலதும் பத்தும்

பேருந்து ஆசனத்தின் கைப்பிடியை சரி செய்த பார்வையிழந்த நபர்

பேருந்து ஆசனத்தில் கழன்றிருந்த கைப்பிடியை அதில் பயணித்த பார்வையிழந்த நபரொருவர் சரிசெய்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

இந் நெகிழ்ச்சிச் சம்பவம் கேரளாவில், கோழிக்கோடில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் பயணித்த பேருந்தில் பார்வையிழந்த நபர் ஒருவர் பயணித்துள்ளார். அங்கு அவர் அமர்ந்திருந்த ஆசனத்தின் கைப்பிடி கழன்றிருந்தது.

அதனை உணர்ந்த குறித்த நபர் தனது கைப்பையில் இருந்த சிறிய உபகரணங்களை வைத்து ஆசனத்தில் கழன்றிருந்த கைப்பிடியை சரிசெய்துள்ளார்.

இதனை அருகிலிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காணொளி தற்போது பலரையும் கவர்ந்து வைரலாகி வருகின்றது. காணொளியைப் பார்த்த பலரும் பார்வையிழந்த குறித்த நபருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருவதுடன் பார்வையிழந்தும் சமூகசேவையாகக் கருதி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button