கவிதைகள்

“விடிவினைத் தந்திடு வேண்டுறோம் வேலவா” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
     மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
      மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா
 
 மேதினி எங்கணும் விரக்தியே பெருகுது
  யாரிடம் போவோம் யார்க்கெடுத் துரைப்போம்
  கலங்கியே நிற்கிறார் கந்தக் கடவுளே
  கலக்கத்தைப் போக்கி காத்திட வேண்டும்
 
 கற்றவர் கலங்கிறார் கயவர்கள் எழுகிறார்
 சூதும் வாதுமே சூழ்ந்துமே நிற்குது
 அபயம் தேடி அனைவரும் அலைகிறார்
 அப்பனே முருகா அருந்துணை நீயே 
 
 நீதியும்  கூட  விற்பனை  ஆகுது
 வாதிடும் வக்கீல் வழுக்கியே விழுகிறார்
 யாரிடம் போவது யாரிடம் சொல்வது
 ஏங்கியே தவிக்கிறார் காத்திடு கந்தா 
 
 சூரரை அழித்திட வந்தவன் அல்லவா
 சூரராய் பலருமே எழுந்துமே வருகிறார்
 வேலினைக் கையினில் ஏந்திய வேலவா
 விடிவினைத் தந்திடு வேண்டுறோம் வேலவா ! 
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *