பலதும் பத்தும்
கூகுள் மெப் பார்த்து கார் ஓட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

காரை ஓட்டும் போது கூகுள் மெப் பார்த்த குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் இன்னமும் முழு ஓட்டுநர் உரிமம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து விதியின்படி முழு ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் உணவு விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே தொலைபேசி பயன்படுத்த அனுமதி உள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த பெண்ணுக்கு 400 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
![]()