பலதும் பத்தும்
102 கிலோ எடையில் தங்க கழிப்பறை 88 கோடியில் ஏலம்

ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவைமைத்துள்ள இந்த கழிப்பறை வரும் 18ஆம் திகதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.
இந்த கழிப்பறை ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பளபளவென மின்னும் தங்க கழிப்பறையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
![]()