வயதானவர்கள் அதிகரிக்கும் ஆசிய நாடுகளில் இலங்கை

வயதானவர்கள் தொகை அதிகமாக வாழும் ஆசிய நாடுகளில் இலங்கை பிரதான இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் நாட்டில் வயதானவர்களின் தொகை 12 வீதமாக இருந்துள்ள நிலையில்,கடந்த 2024 ஆம் ஆண்டில் 18 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் பொது சுகாதார மருத்துவ நிபுணர் நிஷானி உபயசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர்; நாட்டில் 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்பிரகாரம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 வீதமாக இருந்துள்ளனர்.
எனினும் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 18 வீதமாக உயர்ந்துள்ளது.2040 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகையில் 25 வீதமானோர் அதாவது, நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமுள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.பிறக்கும் போதே ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.”
![]()