இலங்கையின் மக்கள் தொகை 21,781 800; வடக்கில் ஆகக் குறைந்த மக்கள்

நாட்டில் இம்முறை சனத் தொகை மதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781 800 என பதிவாகியுள்ளது. அதில் 51.7சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படும் நிலையில் மொத்த சனத் தொகையில் 28.1வீதத்துடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளதுடன் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3வீதத்தினர் வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.
2004 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்புற தகவல்களுக்கு ஏற்ப இலங்கையில் சனத்தொகை மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டுக்கூறுகள் தொடர்பான தகவல்களின் தொகுப்பு மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக நேற்று வியாழக்கிழமை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.அதிலேயே இவ்விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்முறை தொகைமதிப்பின் போது இலங்கையின் மொத்த சனத்தொகை 21,781 800 என பதிவாகியுள்ளது. அதில் 51.7சதவீதம் பெண்கள் மற்றும் 48.3 சதவீதம் ஆண்களும் காணப்படுகின்றனர் நாட்டில் 15 வயதிற்கும் குறைத்தவர்களின் சனத்தொகை 2012-2024 ஆண்டிற்கான தொகைமதிப்புக் காலவரையறைலினுள் 25.2சதவீதத்திலிருந்து 20.7சதவீதமாக 4.5சதவீத அலகுகளில் குறைந்துள்ளது அதேபோல் இந்த காலகட்டத்திள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சனத்தொகை 7.9சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாக 4.7சதவீத அலகுகளினால் அதிகரித்துள்ளது
15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகையானது மொத்த சனத்தொகையில் 66 .7சதவீதமாக காணப்படுகிறது. இது 2012 இல் 66 .9 சதவீதமாக காணப்பட்டது அதன்படி 15-64 வயதுக்குட்பட்ட சனத்தொகைக்கான சதவீதம் 2012 -2024 தொகைமதிப்பு காலவரையறையினுள் இந்த சதவீதம் 0.2 அலகுகளில் குறைந்துள்ளது 15 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகைக்கான கூட்டுத்தொகையை தங்கிவாழ்வோர் கருகப்படும் 2012 ஆம் ஆண்டு தொகைமதிப்பின் பிரகாரம் கணக்கெடுப்பின்படி 49.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 49.8சதவீதமாக அதிகரித்துள்ளது.
தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட இனத்தை அவர்களது இளமாக அடையாளம் காணப்படுகின்றன அதன்படி இலங்கையின் மொந்த சனத்தொகையில் 74.1 சதவீதம் அல்லது சனத்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சிங்களவர்கள் என்றும் 12.3 சதவீதம் பேர் இலங்கை தமிழர்கள் என்றும் 10.5 சதவீதமானோர் இலங்கைச் சோனகர்-முஸ்லிம் என்றும் 2.7 சதவீதமானோர் இந்திய தமிழர்கள்-மலையக தமிழர்கள் என்றும் பதிவாகியுள்ளனர். மேலும் மீதமுள்ள 0.3 சதவீதமானது சனத்தொகை சதவீதத்தில் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள் பாரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட பிற இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பதிவாகியுள்ளது
தொகைமதிப்பின் போது நபர்களினால் சுயமாக அறிவிக்கப்பட்ட சமயத்தை அவர்களது சமயமாக அடையாளங்காணப்படுகின்றன நாட்டில் மொத்த சனத்தொகையில் 69.8 சதவீதம் பௌத்தர்கள் என்பதுடன் 12.6சதவீதம் இந்துக்கள் ஆவர். 10.7சதவீதம் இஸ்லாமியர்கள். 5.6 சதவீதம் றோமன் கத்தோலிகர்கள் மற்றும் 1.3 சதவீதம் ஏனைய கிறிஸ்தவர்கள் ஆவர். மீதமுள்ளவர்கள் இந்த சமயங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. மேலும் அந்த சதவீதம் 0.02 என்ற சிறிய எண்ணிக்கையைக் கொண்டு காணப்படுகிறது.
மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்:
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1வீத்துடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3வீதத்தினர் வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.
மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக்கொண்டால்:
கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறது. அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும்.அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.2 மில்லியனுக்கும் (20 லட்சம்) அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
குருநாகல் (1,760,829),கண்டி (1,461,269),களுத்துறை (1,305,552),இரத்தினபுரி (1,145,138),காலி (1,096,585)
இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.
வளர்ச்சி வீதம்:அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.
![]()