பலதும் பத்தும்

குவாத்தமாலாவில் வெடிக்கும் தருவாயில் எரிமலை

குவாத்தமாலாவில் (Guatemalan) ஃபியூகோ (Fuego) எரிமலை சாம்பலை கக்கி வருகின்ற நிலையில், அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சான் ஜுவான் அலோட்டெனாங்கோ (San Juan Alotenango) நகராட்சியில் உள்ள எல் போர்வெனீர் ( El Porvenir) மற்றும் லாஸ் லஜிடாஸ் ( Las Lajitas) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எரிமலைச் செயல்பாடு தீவிரமடைந்தால், இந்த ஓட்டங்கள் மேலும் விரிவடையும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் எரிமலைக்கு மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சுமார் 100 கி.மீ (62 மைல்கள்) வரையிலான பகுதிகளை சாம்பல் புகை ஆக்கிரமிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்றைய தினம் பாதுகாப்பு அபாயம் குறித்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button