பலதும் பத்தும்

16,000 ட்ரோன்களின் வானவேடிக்கை; கின்னஸ் உலக சாதனை படைத்த சீனா!

கிட்டத்தட்ட 16,000 ட்ரோன்களின் வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் சீனா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் ட்ரோன்கள் மூலம் வானவேடிக்கை நிகழ்ச்சி இடம்பெற்று வருவது வழக்கம்.

வண்ண வண்ண நிறங்களுடன் அழகிய வடிவில் ட்ரோன்கள் மூலம் பொருள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது.

அதற்கமையவே 2025 ஆம் ஆண்டுக்கான வான வேடிக்கை நிகழ்ச்சிகளை கிட்டத்தட்ட 16000 ட்ரோன்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மரம், பூ உள்ளிட்ட இயற்கை வடிவங்கள் பல வகையான வண்ண நிறங்களுடன் வானில் மின்னுமளவில் காட்சிப்படுத்தப்பட்டன.

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட வானவேடிக்கை உலகளவில் அனைவரையும் ஈர்த்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button