முச்சந்தி
உள்முரண்களால் சிதையும் பாலஸ்தீனம்… காசா யுத்த நிறுத்தம்: டிரம்பின் நோபல் பரிசுக்கா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காசாவில் போர் நின்ற பின் ஹமாஸுடன் தற்போது மோதுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை காசா யுத்த நிறுத்தம் டிரம்பின் நோபல் பரிசுக்காகவா உருவாக்கப்பட்டதா என்ற ஐயப்பாடும் உள்ளது. இதேவேளை இன்று, நேற்றல்ல நீண்டகாலமாகவே உள்முரண்களால் சிதையும் பாலஸ்தீனம் அழிந்து கொண்டிருக்கிறது)நீண்ட காலத்தின் பின்னர் காசாவில் போர் நிறுத்தம் ஆரம்பமாகிய நிலையில், இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை காசாவில் உள்நாட்டு வன்முறை அச்சம் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் போராளிகளை திரும்ப அழைத்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் ‘டோக்முஷ்’ (Doghmush) சமூகத்தினர் ஹமாஸுக்கு எதிராக தாக்கியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலியப் படைகள் காசா பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து மீண்டும் உள்நாட்டு வன்முறை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் காசா மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் பல்லாயிரம் போராளிகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
அதேசமயம் உள்முரண்பாடுகளால் சிதையும் பாலஸ்தீனத்தில் இந்த போர் நிறுத்தம் டிரம்பின் நோபல் பரிசுக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முக்கியமாக இருக்கும் கேள்வி என்னவென்றால் காசா மண்ணில் இந்த அமைதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதேயாகும்.
காசா போர் நிறுத்தம் ஏற்பட்டதன் விளைவாக காணாமல் போன பாலஸ்தீனியர்களின் உடல்களைக் கண்டுபிடிக்க இடிபாடுகளைத் தோண்டி வருவதாக காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. மேலும் 9,500 மக்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும்
கூறப்படுகிறது.
பணயக் கைதிகள் விடுதலை:
அக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 13, 2025 அன்று தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ICRC) பலர் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆனால் காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் பின்னர் பாலஸ்தீன போராளிகள் இடையே உள்முரண்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.இஸ்ரேலிய துருப்புக்களால் சமீபத்தில் வெளியேறிய பிறகு, காசாவின் பகுதிகளின் மீது மீண்டும் கட்டுப்பாட்டை நிலைநாட்ட ஹமாஸ் தனது பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களை திரும்ப அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுதமேந்திய ஹமாஸ் பிரிவுகள் ஏற்கனவே பல மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காசா காவல்துறையின் நீல நிற சீருடையிலும் உள்ளனர். ஆனால் ஹமாஸ் ஊடக அலுவலகம் “தெருக்களில் போராளிகளை” நிறுத்தவில்லை என்று மறுத்து வருகிறது.
தற்போது காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தலைமறைவாக ஹமாஸுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே காசாவில் பதட்டங்கள் உருவாகி வருகின்றன.
கடந்த வார இறுதியில் ஆயுதமேந்திய குழுவிற்கும் ஹமாஸ் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதில் எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர் என்று காசாவில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா நகரத்தின் சப்ரா பகுதியில் அல் ஜசீரா அரபிய நிருபர், ஆயுதமேந்திய போராளிக்குழு – ஹமாஸ் இடையேயான மோதல்களை செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்த 28 வயதான பாலஸ்தீன பத்திரிகையாளர் சலே அல்ஜஃபராவி இந்த மோதலில் சிக்கி உயிரிழந்தார்.
காசாவில் உள்ள போராளிக்குழுக்கள் இதுதானா? இந்த ஆயுதமேந்திய கும்பல்கள் யார்? அவர்களின் இலக்குகள் என்ன? அவர்கள் உண்மையில் இஸ்ரேலுடன் தொடர்புடையவர்களா? என்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
இஸ்ரேல் தொடர்புள்ள ‘டோக்முஷ்’
காசாவின் மிக முக்கியமான குழுக்களில் ஒன்றான டோக்முஷ் அமைப்பினர், ஹமாஸுடன்
நீண்ட காலமாக பதட்டமான உறவைக் கொண்டுள்ளனர். மேலும் அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அந்தக் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர்.
நீண்ட காலமாக பதட்டமான உறவைக் கொண்டுள்ளனர். மேலும் அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அந்தக் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர்.தற்போது அங்கே ஹமாஸால் நடத்தப்படும் உள்துறை அமைச்சகம், அதன் படைகள் ஒழுங்கை மீட்டெடுக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளது. மேலும் எதிர்ப்பின் கட்டமைப்பிற்கு வெளியே எந்தவொரு ஆயுத நடவடிக்கையும் உறுதியாகக் கையாளப்படும் என்று எச்சரித்தும் உள்ளனர்.
காசா நகரில் ஹமாஸை எதிர்த்துப் போராடும் டோக்முஷ், 2008 ஆம் ஆண்டு ஜெய்ஷ் அல்-இஸ்லாம் குழு இஸ்ரேலிய வீரர் கிலாட் ஷாலிட்டைக் கைப்பற்றியதில் மொம்தாஸ் டோக்முஷ் ஈடுபட்டிருந்தார். மற்ற உறுப்பினர்கள் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகாரசபையுடன் இணைந்த குழுக்களில் இருந்துள்ளனர்.
இதேவேளை ஹமாஸுடன் போரிட்ட டோக்முஷ் இஸ்ரேலுடன் இணைந்தவர்கள் என்று சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் காசாவில் இருந்து வந்த பிற வட்டாரங்கள் இஸ்ரேலுடனான தொடர்பை மறுக்கின்றன.
உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த ஆயுதப் பிரிவான சஹேம் பிரிவு, காசா நகரத்தில் உள்ள ஜோர்டான் கள மருத்துவமனைக்கு அருகில் ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் எதிர்ப்புப் போராளிகளை கொன்றபோது மோதல்கள் தொடங்கியதாகக் கூறியது.
மேலும் டோக்முஷ் துப்பாக்கிதாரிகள் பதுங்கியிருந்த ஒரு குடியிருப்புத் தொகுதியைத் தாக்கியதாகவும், அவர்களில் 32 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இச் சம்பவத்தில் ஊடகர் அல்ஜஃபராவியும் கொல்லப்பட்டார். அல்ஜஃபராவியின் கொலை குறித்து பல கண்டனங்கள் எழுந்தன. இதற்கு முன்னராக அல் ஜசீரா நிருபரான அல்-ஷெரிப் கடந்த ஆகஸ்ட் 10 அன்று இஸ்ரேலால் கொல்லப்பட்டார். அல்-ஷெரிப்பைப் போலவே அல்ஜஃபராவியும் தனது செய்திக்காக இஸ்ரேலியர்களால் பலமுறை அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டோக்முஷ் இஸ்ரேல் துணைப்படை ?
டோக்முஷ் உண்மையில் இஸ்ரேலால் ஆதரிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன. காசாவில் இருந்து சில தகவல்கள், இவர்களுக்கு இஸ்ரேலிய தொடர்பு இருப்பதாகக் கூறின, ஆனால் குழுவின் தலைவர்கள் அதை மறுத்துள்ளனர்.ஆனால் அக்டோபர் தொடக்கத்தில், காசா நகரத்தில் உள்ள இக்குழுவின் தலைவரான நிஜார் டோக்முஷ், காசா நகரில் மனிதாபிமான மண்டலம் என்று அழைக்கப்படுவதை நிர்வகிக்க இஸ்ரேலிய இராணுவத்தால் தன்னைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டதாக செய்தித்தாளிடம் கூறிய அவர், பின்னர் இஸ்ரேலிய இராணுவம் காசா நகரில் உள்ள தனது சுற்றுப்புறத்தின் மீது குண்டுவீசி, படையெடுத்து வீடுகளை திட்டமிட்டு அழித்ததாகவும் கூறினார்.
டோக்முஷ் மற்றும் ஹமாஸ் ஒருவருக்கொருவர் குரோத விரோதப் போக்கைக் கொண்டுள்ளன. இது கடந்த காலத்தில் நீடித்தமையால் பாரிய உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
சிக்கலான இறுதி கட்டம்:
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இறுதி கட்டம் காசா பாதுகாப்பு ஆகும். அது எந்தவொரு மீண்டும் எழுச்சி பெறும் பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்தும் காசா சரியாகப் பாதுகாக்கப்படும் வரை இருக்கும் என்பதை உறுதி செய்ய இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கோரியுள்ளன.
மேலும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள வார்த்தைகள் தெளிவற்றவையாக உள்ளன. முக்கியமாக இஸ்ரேலிய படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை வழங்கவில்லை. ஹமாஸ் அமைப்பு இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது. காலக்கெடுவை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஆரம்பமாகிய நிலையில், காசாவில் உள்நாட்டு வன்முறை அச்சம் நிலவுகிறது. இதனால் ஹமாஸ் போராளிகளை திரும்ப அழைத்துள்ளதால் மீண்டும் இஸ்ரேல் இராணுவத்துடன் முறுகல் நிலமை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இஸ்ரேலியப் படைகள் காசா பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து மீண்டும் உள்நாட்டு வன்முறை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், காசா மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் பல்லாயிரம் போராளிகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
போர் முடிந்ததும் காசாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், இந்த அணிதிரட்டல் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது டிரம்பின் திட்டத்தின் பிந்தைய கட்டங்களுக்கு ஒரு முக்கிய தலையிடியான விடயமாகும்.
![]()