பலதும் பத்தும்

இலங்கையில் முதியோர்களின் பரிதாப நிலை

இலங்கையில் தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 0707 89 88 89 எனும் வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண உதவிச் சேவையை தொடர்புகொள்ள முடியும் என செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளை பரிசீலிப்பதற்காக பராமரிப்பு சபையொன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களுடன் விரைவில் பிரதேச செயலக அலுவலகங்களில் இருந்து இணைய வழி ஊடாக தொடர்புகொள்ள திட்டமிட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button