தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாளில் நூல் அறிமுக நிகழ்வு!…. நவீனன்

தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் பன்னிரண்டாம் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வருடம் சிட்னி தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாளில், சிறப்பு நிகழ்வாக புத்தகங்களின் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.
போராளியின் காதலி, வாசலிலே கிருசாந்தி, பொன் வண்டு ஆகிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணி முதல் 5 மணி வரை Brigade House Hall, 3 Junia Ave, Toongabbie NSW 2146 எனும் முகவரியில் நடைபெற உள்ளது.
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் “சூரியப் புதல்விகள்” என்னும் பாடல் இறுவட்டு வெளியீடும் நடைபெறுகிறது. மேலும் இளையோர் கலைநிகழ்வும், பெரியோர் மதிப்பளிப்பும் நடைபெறும். அதேவேளை தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள் அவுஸ்திரேலியாவின் மற்றய மாநிலங்களான மெல்பேர்ண், அடிலைட்டிலும் இந்த புத்தகங்களின் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.
சிட்னி நிகழ்ச்சியில் முப்பதுற்கும் மேற்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த புத்தகங்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் நடைபெறும். இவ்வருட சிட்னி தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள் புத்தகங்களின் அறிமுக நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைக்கின்றனர்.

![]()