பலதும் பத்தும்

கிளாஸ்கோவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைகள்

புள்ளிவிபரங்களின்படி, ஆகஸ்ட் வரையிலான 12 மாதங்களில் கிரேட்டர் கிளாஸ்கோவில்  தனியாரின் வசம் உள்ள வீடுகளுக்கான வாடகைகள் மாதத்திற்கு £68 அதிகரித்து £1,251 ஆக உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் தனியார் வாடகைகள் 29.9% அதிகரித்துள்ளன.

அதிகரித்து வரும் வாடகைகள் மக்களை வீடற்ற நிலைக்குத் தள்ளக்கூடும் என்று தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த அதிகரிப்பு மக்கள் கூடுதலாக 5.7% உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஸ்காட்டிஷ் அரசாங்க அறிக்கையில் கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் வீடற்ற தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிளாஸ்கோவில் வாடகை பணவீக்கம் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button