பலதும் பத்தும்
வல்லிபுர ஆழ்வார் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார் கருட வாகனத்தில் கொடித் தம்பத்தடியை நோக்கி எழுந்தருளினார். கொடித் தம்பத்தடியில் அபிஷேகம், கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்கக் காலை-09 மணியளவில் கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அடியவர்கள் புடைசூழ வல்லிபுர ஆழ்வார் உள்வீதி உலா வரும் தொடர்ந்தும் 17 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
![]()